/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய தடகளத்தில் சாதனைவீரர், வீராங்கனைக்கு பாராட்டு
/
தேசிய தடகளத்தில் சாதனைவீரர், வீராங்கனைக்கு பாராட்டு
தேசிய தடகளத்தில் சாதனைவீரர், வீராங்கனைக்கு பாராட்டு
தேசிய தடகளத்தில் சாதனைவீரர், வீராங்கனைக்கு பாராட்டு
ADDED : மார் 25, 2025 12:59 AM
தேசிய தடகளத்தில் சாதனைவீரர், வீராங்கனைக்கு பாராட்டு
நாமக்கல்:தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், ஐந்து நாட்கள் நடந்தது. தமிழக அணி சார்பில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். அதில், ஈட்டி, குண்டு மற்றும் தட்டு எறிதல் போட்டி, 400 மீ., தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மூன்று தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கல பதக்கம் என, மொத்தம், ஒன்பது பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி, ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம்; மோகன்ராஜ், உயரம் தாண்டுதலில் தங்கம்; அருள்மொழி, 400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கம்; கருப்பையா வெள்ளிப்பதக்கம் என, மொத்தம், 9 பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை, கலெக்டர் உமா பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜ், நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.