/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது
/
கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது
ADDED : மார் 28, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது
பள்ளிப்பாளையம்:வெப்படை பகுதியில், கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசாவை சேர்ந்த லட்சுமிதாஸ், 45, என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில், லட்சுமிதாஸ் அங்குள்ள நுாற்பாலையில் பணிபுரிந்து வருவதும், மேலும் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு
வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

