/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்., 'டிவி' அறை இடிப்புவிசாரணைக்கு உத்தரவு
/
பஞ்., 'டிவி' அறை இடிப்புவிசாரணைக்கு உத்தரவு
ADDED : ஏப் 03, 2025 01:32 AM
பஞ்., 'டிவி' அறை இடிப்புவிசாரணைக்கு உத்தரவு
சேந்தமங்கலம்:கொல்லிமலை யூனியன், சேலுார்நாடு, பள்ளக்குழிப்பட்டியை சேர்ந்தவர் அன்புராஜன், 67; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரது தம்பி மோகன், 53; அரசு பஸ் டிரைவர். இவர்களின் வீடு, பள்ளிக்குழிப்பட்டியில் உள்ளது. இருவரும் அங்கு குடியிருந்து வருகின்றனர். அன்புராஜன் வீட்டிற்கும், மோகன் வீட்டிற்கும் இடையே சிதிலமடைந்த பஞ்.,க்கு சொந்தமான, 'டிவி' அறை உள்ளது. கடந்த காலங்களில், 'டிவி' வைத்து கிராம மக்கள் பார்த்து வந்தனர். நாளடைவில் இந்த அறை சிதிலமடைந்தது.
கடந்த மாதம், அன்புராஜ் வீடுவேலை செய்தபோது, இருவரின் வீட்டிற்கும் இடையில் இருந்த, பஞ்சாயத்து, 'டிவி' அறையை இடித்துள்ளனர்.
இதனால், கடந்த, 31ல் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகார்படி, செம்மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அன்புராஜ், சேலுார் நாடு பஞ்., 'டிவி' அறையை இடித்ததாக வாட்ஸாப்பில், நேற்று தகவல் பரவியதையடுத்து, வருவாய்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தாசில்தார் சந்திரா கூறுகையில், ''பஞ்., 'டிவி' ரூமை இடித்ததாக தகவல் வந்துள்ளது. இதனால், அப்பகுதி வி.ஏ.ஓ.,வை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அது உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

