/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் திருவிழாவில் நாட்டு மாட்டு சந்தை
/
கோவில் திருவிழாவில் நாட்டு மாட்டு சந்தை
ADDED : ஏப் 03, 2025 01:33 AM
கோவில் திருவிழாவில் நாட்டு மாட்டு சந்தை
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, பெரியமணலியில் பிரசித்திபெற்ற கரிய காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த, 19ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, கரியகாளியம்மன் திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
விழாவை முன்னிட்டு, நேற்று, இன்று, நாளை என மூன்று நாட்கள் பாரம்பரிய நாட்டுமாட்டு சந்தை நடக்கிறது. இதில், காங்கேயம் பசுமாடு, ஒரு லட்சம் ரூபாய், காங்கேயம் காளை, இரண்டு லட்சம் ரூபாய், மைசூர்பூரணி மாடு, இரண்டு லட்சம் ரூபாய், பொலிகாளை, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. 500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
கோவில் நிர்வாகம் சார்பில் தீவனம் அளிக்கப்பட்டது. பரமத்திவேலுார், கரூர், மணப்பாறை, ஈரோடு, புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, கோவை, சேலம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

