/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கறிக்கடை, ஓட்டல் கடை ஓனர்களுக்கு எச்சரிக்கை
/
கறிக்கடை, ஓட்டல் கடை ஓனர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஏப் 03, 2025 01:35 AM
கறிக்கடை, ஓட்டல் கடை ஓனர்களுக்கு எச்சரிக்கை
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் பகுதிக்குட்பட்ட கறிக்கடை, சில்லிக்கடை, ஓட்டல் கடை உரிமையாளர்களுக்கு, பி.டி.ஓ., லோகமணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு; எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் ஊராட்சிக்குட்பட்ட, செக்காங்காடு, எலச்சிபாளையம் மெயின் ரோடு, இலுப்பிலி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சில்லி கடை, கறிக்கடை, ஓட்டல் கடை உரிமையாளர்கள், தங்களின் கடைகளின் கழிவு களை சாலையோரம், மயானம் அருகே மற்றும் பொது இடங்களில் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வெறிநாய்கள் மோப்பம் பிடித்து வந்து, ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே, அவரவர் கடைகளின் இறைச்சி கழிவுகளை, உரிமையாளர்களுக்கு சொந்தமான இடத்திலேயே குழி தோண்டி புதைத்து மட்கும் படி செய்ய வேண்டும். இனிமேல் பொது இடங்களில் வீசக்கூடாது. மீறினால், அபராதம், போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

