தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இன்று தீ மிதி திருவிழாகுவிந்தனர் பக்தர்கள்

இன்று தீ மிதி திருவிழாகுவிந்தனர் பக்தர்கள்

இன்று தீ மிதி திருவிழாகுவிந்தனர் பக்தர்கள்


ADDED : ஏப் 08, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று தீ மிதி திருவிழாகுவிந்தனர் பக்தர்கள்

குண்டம் விழாவையொட்டி பண்ணாரி கோவில் நேற்றிரவு அலங்கார பந்தல்,

மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலி

த்தது. முன்னதாக கோவிலில் நேற்று காலை முதல் இரவு வரை அம்மன் சப்பரத்தில் கோவிலை சுற்றி உலா வந்தார். அதன் பின்னால் வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள் வேல் கம்புகளுடன் மெரவணை எடுத்து வலம் வந்தனர். கோவில் முன்பு விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர். இன்னும் பலர் தீச்சட்டி ஏந்தி ஆடினர். குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் நேற்றிரவுப்படி, 50 ஆயிரம் பக்தர்கள் தங்கியிருந்தனர். குண்டம் பகுதியை சுற்றி பழங்குடி மக்கள் பீனாட்சி வாத்தியங்களை வாசித்து நடனமாடினர்.

இரவு, 10:௦௦ மணிக்கு மேல் குண்டத்தில் வேம்பு, ஊஞ்சல் விறகுகளை போட்டு தீப்பற்ற வைத்தனர். அதிகாலை, 3:௦௦ மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று சருகு மாரியம்மனுக்கு பூஜை நடந்தது. அங்கிருந்து தாரை தப்பட்டை முழங்க மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது. குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும், மலர்களை குண்டத்தில் துாவியும், பூசாரி ராஜசேகர் முதலில் குண்டம் இறங்கினார். இதை தொடர்ந்து இசைக்கலைஞர்கள் உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் தீ மிதிக்க தொடங்கினர். குண்டத்தின் அருகில் வீணை அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us