/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெற்றிலை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
வெற்றிலை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 10, 2025 01:23 AM
வெற்றிலை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ப.வேலுார்:ப.வேலுார், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனுார், குப்பிச்சிபாளையம், பொத்தனுார், பாண்டமங்கலம், அண்ணா நகர், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விளைந்த வெற்றிலைகளை பறித்து, பாண்டமங்கலம், பொத்தனுார், ப.வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், ப.வேலுார், கரூர் சாலையில் செயல்பட்டு வரும் வெற்றிலை ஏல மார்க்கத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம், 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை, 8,500 ரூபாய்க்கும்; 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 4,000 ரூபாய்-க்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை, 4,000 ரூபாய்-க்கும்; முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 1,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று, இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை, 10,000 ரூபாய்-க்கும், இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 5,000 ரூபாய்-க்கும் விற்பனையானது. முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை, 6,000 ரூபாய்க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை, 2,500 ரூபாய்க்கும்
விற்பனையானது. இதனால் வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

