/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
ADDED : ஏப் 10, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரத்தில் நடந்த, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தேவராசன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி வரவேற்றார். இதில், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2006 ஜூன், 1முதல் வழங்க வேண்டும்.
நிதிமோசடி திட்டமான புதிய தன் பங்கேற்பு திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை நிராகரித்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

