/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதையில் வாகனங்களுக்குதீ வைத்த வாலிபர் கைது
/
போதையில் வாகனங்களுக்குதீ வைத்த வாலிபர் கைது
ADDED : ஏப் 11, 2025 01:18 AM
போதையில் வாகனங்களுக்குதீ வைத்த வாலிபர் கைது
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, டூவீலர்களுக்கு தீ வைத்த மது போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி டவுன் பஞ்., சிவன் காலனியை சேர்ந்தவர் முத்தையா, 50, கூலி தொழிலாளி. இவர் தினமும் அருகில் குடியில்லாத வீட்டில், இரவு நேரங்களில் தனது டூவீலர் பைக்கையும், மகன் பைக்கையும் நிறுத்தி வந்துள்ளார். இது பிடிக்காத அருகில் குடியிருந்த செந்தில்குமார், 40, என்பவர் மது போதையில், நேற்று முன்தினம் அதிகாலை தனியாக வீட்டில் நிறுத்தியிருந்த டூவீலர்களுக்கு தீ வைத்துள்ளார். இதில், இரண்டு டூவீலர்களும் எரிந்தது. இதையடுத்து, டூவீலர்களுக்கு தீ வைத்த செந்தில்குமாரை எருமப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

