/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதருக்குதிருக்கல்யாண விழா கோலாகலம்
/
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதருக்குதிருக்கல்யாண விழா கோலாகலம்
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதருக்குதிருக்கல்யாண விழா கோலாகலம்
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதருக்குதிருக்கல்யாண விழா கோலாகலம்
ADDED : ஏப் 11, 2025 01:18 AM
நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதருக்குதிருக்கல்யாண விழா கோலாகலம்
நாமக்கல்:நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர் சுவாமிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருக்கல்யாணம் விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது.
நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி கோவில், அரங்கநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், பங்குனி தேரோட்ட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் கடந்த, 4ம் தேதி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாண விழா ஏழாம் நாளான நேற்று இரவு, நாமக்கல் நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நரசிம்மர், அரங்கநாதர் சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி, திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து நாளை (ஏப்., 12) காலை 8:30 மணிக்கு நரசிம்மர் கோவில் தேரோட்டம், மாலை 4:30 மணிக்கு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.