/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோதனைச்சாவடியை அகற்றியதால் எல்லையில் குற்றச்செயல் அதிகரிப்பு
/
சோதனைச்சாவடியை அகற்றியதால் எல்லையில் குற்றச்செயல் அதிகரிப்பு
சோதனைச்சாவடியை அகற்றியதால் எல்லையில் குற்றச்செயல் அதிகரிப்பு
சோதனைச்சாவடியை அகற்றியதால் எல்லையில் குற்றச்செயல் அதிகரிப்பு
ADDED : ஜூன் 17, 2025 02:33 AM
பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்ட எல்லையான, பள்ளிப்பாளையம் பாலம் பகுதியில் சோதனைச்சாவடியை அகற்றியதால், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்தால், ஈரோடு மாவட்ட எல்லை வந்து விடும். இந்த பாலத்தில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, வாகன தணிக்கை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக, இரவில் வாகன தணிக்கை தீவிரமாக நடக்கும். மாவட்ட எல்லையில் உள்ளதால், முக்கியத்துவம் வாய்ந்த சோதனைச்சாவடியாக இருந்து வந்தது.
இந்நிலையில், மூன்றாண்டுக்கு முன் பள்ளிப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும்பணி தொடங்கியது. அப்போது சாலை விரிவாக்கத்துக்காக, சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. தற்போது பணி முடிந்து, மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. எனவே, அகற்றப்பட்ட சோதனைச்சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் உமாசங்கர் கூறுகையில், ''இந்த சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின்போது, பல குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். தற்போது சோதனைச்சாவடி இல்லாததால் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது. குற்றச்செயல்களை தடுக்க, அகற்றப்பட்ட சோதனைச்சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும்,'' என்றார்.
லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் கூறுகையில், ''சோதனைச்சாவடி இல்லாததால், ஈரோட்டில் இருந்து இரவில் மது குடிக்க பள்ளிப்பாளையத்திற்கு ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். சோதனைச்சாவடி இல்லாததால் மர்ம நபர்களின் நடமாட்டம் பள்ளிப்பாளையத்தில் அதிகரித்துள்ளது. எனவே, மீண்டும் சோதனைச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.