தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு

கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு

கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு


ADDED : ஜூலை 14, 2025 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கொல்லிமலையில் முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை, நவக்காடு வரை உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என, நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.

அவருடன் மதுவிலக்கு ஏ.டிஎஸ்பி., தனராசு கலந்துகொண்டார். ஆய்வின் போது, பழைய மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு கடும் சட்டம் இயற்றியுள்ளது; எனவே யாரும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடக்கூடாது; கள்ளச்சாராயம் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டாம்; கள்ளச்சாராயம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us