/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஷ்ணுபதி புண்ணியகாலம்: பக்தர்கள் கொடிமர வழிபாடு
/
விஷ்ணுபதி புண்ணியகாலம்: பக்தர்கள் கொடிமர வழிபாடு
ADDED : நவ 18, 2025 01:41 AM
நாமக்கல், விஷ்ணுபதி புண்ணியகாலத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் கொடிமரத்தை சுற்றிவந்து வழிபாடு செய்தனர்.
விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் செய்யப்படும் கொடிமர பிரார்த்தனை, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள திருஷ்டி, அதன் சம்பந்தான பிரச்னை, தோஷங்களை நீக்கும் வல்லமை படைத்ததாக பக்தர்களால் நம்மப்படுகிறது. இதனால் அன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வர். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய தமிழ் மாதங்களின் முதல் நாள் ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.
அதன்படி, கார்த்திகை முதல் நாளான நேற்று, நாமக்கல் நரசிம்மர் கோவிலின் முன் உள்ள கொடிமரத்தை பக்தர்கள், 27 முறை சுற்றிவந்து தீபமேற்றி வழிபாடு செய்தனர். அதிகாலையில் இருந்து காலை, 10:30 மணி வரை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

