/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜல்லிக்கட்டு தேதி பிப்., 1க்கு மாற்றம்
/
ஜல்லிக்கட்டு தேதி பிப்., 1க்கு மாற்றம்
ADDED : ஜன 22, 2025 01:21 AM
ஜல்லிக்கட்டு தேதி பிப்., 1க்கு மாற்றம்
குமாரபாளையம்,: குமாரபாளையத்தில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி, பிப்., 2ல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., வசந்தி, டி.எஸ்.பி., இமயவர்மன், இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், போலீசார் பாதுகாப்பு பணி காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டி பிப்., 1க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் கூறியதாவது: குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருந்த, பிப்., 2, 3ல் நாமக்கல் அருகே கோவில் திருவிழா நடக்கிறது. அங்கு, பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்பட வேண்டும்.
பிப்., 2ல் ஜல்லிக்கட்டு நடந்தால், அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால், பிப்., 1ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக்கொள்ள போலீசார் கேட்டுகொண்டதன் பேரில், பிப்., 1ல் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.