/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் விபத்தை குறைக்க ரூ.10 கோடியில் விபத்து தடுப்பான்கள்
/
கொல்லிமலையில் விபத்தை குறைக்க ரூ.10 கோடியில் விபத்து தடுப்பான்கள்
கொல்லிமலையில் விபத்தை குறைக்க ரூ.10 கோடியில் விபத்து தடுப்பான்கள்
கொல்லிமலையில் விபத்தை குறைக்க ரூ.10 கோடியில் விபத்து தடுப்பான்கள்
ADDED : பிப் 01, 2025 12:45 AM
கொல்லிமலையில் விபத்தை குறைக்க ரூ.10 கோடியில் விபத்து தடுப்பான்கள்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில், ஓமலுார் - -சங்ககிரி, -திருச்செங்கோடு -- பரமத்தி சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, மூன்று ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 227 பணிகள், 412 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டில், 57 பணிகளுக்கு, 154 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் விபத்தை குறைக்க, 10 கோடி ரூபாயில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் முறையில், ரப்பர் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் புறவழிச்சாலை, 207 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. அதே போன்று திருச்செங்கோடு புறவழிச்சாலை, 124 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், எம்.பி., மாதேஸ்வரன், மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.