/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வங்கி ஊழியரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
/
வங்கி ஊழியரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 25, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி ஊழியரை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
பள்ளிப்பாளையம், :பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகுமார், 33; இவர் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 16ல், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெய்சூர்யா, 23, நாகர்ஜூன், 25, இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் சேர்ந்து, கீர்த்திகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து கீர்த்திகுமார் அளித்த புகார்படி, வெப்படை போலீசில் வழக்குப்பதிவு செய்து, ஜெய்சூர்யா, நாக ஆர்ஜூன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.