ADDED : ஜன 25, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடு திருடிய 2 பேர் கைது
நாமக்கல், :நாமக்கல், நல்லிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட வள்ளிபுரம் பிரிவு சாலை அருகே, நேற்று மாலை, 5:00 மணிக்கு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த, 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் ஆடு வைத்திருந்தனர்.
விசாரணையில், எர்ணாபுரம், என்.கே.புதுார், குடித்தெருவை சேர்ந்த சிவக்குமாரின் ஆட்டை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ஆட்டையும், ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.