/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
/
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஜன 25, 2025 01:16 AM
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
திருச்செங்கோடு, :திருச்செங்கோடு நகர போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட நெசவாளர் காலனி மற்றும் கூட்டப்பள்ளி, ஊஞ்சப்பாளையம் சாலை பகுதிகளில், 2017ல் வழப்பறி சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், முருகேசன் மற்றும் பிரபு ஆகியோர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு, திருச்செங்கோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுரேஷ்பாபு, நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முருகேசன், பிரபு ஆகிய இருவருக்கும், தலா, 3 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

