/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலெக்டர் ஆபீசில் குறைதீர் முகாம்ரூ.3.26 லட்சம் மதிப்பில் நலத்திட்டம்

ADDED : பிப் 18, 2025 12:52 AM
கலெக்டர் ஆபீசில் குறைதீர் முகாம்ரூ.3.26 லட்சம் மதிப்பில் நலத்திட்டம்
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, 510 மனுக்களை பெற்றார். அதனை உரிய அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இரண்டு குடும்பங்களுக்கு, தலா, 35,000 வீதம், 70,000 ரூபாய் மதிப்பில், இயற்கை மரண உதவித்தொகை, சாலை விபத்தில் மரணமடைந்த, ஒருவரின் குடும்பத்தினருக்கு, 2.05 லட்சம் ரூபாய் மதிப்பில் விபத்து மரண உதவித்தொகை, கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மின்னணு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
மேலும், கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து, ப.வேலுார் தாலுகா, வடகரையாத்துார், மேல்முகம் கிராமத்தை சேர்ந்த துரைசாமிக்கு சொந்தமான, 17 ஆடுகள் இறந்ததற்கு இழப்பீடாக, 51,000 ரூபாய்க்கான காசோலை என மொத்தம், 4 பேருக்கு, 3.26 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சுமன், தனி டி.ஆர்.ஓ., சரவணன், தனி துணை கலெக்டர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.