/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோட்டில் போதையில் பணம் கேட்டு நண்பனை கொலை செய்த 4 பேர் கைது
/
தி.கோட்டில் போதையில் பணம் கேட்டு நண்பனை கொலை செய்த 4 பேர் கைது
தி.கோட்டில் போதையில் பணம் கேட்டு நண்பனை கொலை செய்த 4 பேர் கைது
தி.கோட்டில் போதையில் பணம் கேட்டு நண்பனை கொலை செய்த 4 பேர் கைது
ADDED : ஜூலை 02, 2024 06:51 AM
திருச்செங்கோடு : போதையில் ஏற்பட்ட தகராறின் போது, அடித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிய நண்பர்கள் நால்வரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருச்செங்கோடு அடுத்த சக்திநாயக்கன்பாளையம், பெரிய ஆயப்பாளையம் ஏரியில், கடந்த, 26ல் ஆண் சடலம் ஒன்று மீட்-கப்பட்டு, இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் விசா-ரணை மேற்கொண்டனர். அதில், பிணமாக மீட்கப்பட்டவர் கோவில்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி மணி-கண்டன், 43, என்பது தெரிய வந்தது. உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருச்-செங்கோடு சாலப்பாளையத்தை சேர்ந்த மண்ணு, 31, மாதேஸ்-வரன், 21, குட்டிமேய்க்கம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், 35, தர்மபிரகாஷ், 30, ஆகியோர் சக்திநாயக்கன்பாளையம் கிராம நிர்-வாக அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலையில், நேற்று சரணடைந்-தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரணடைந்த நால்-வரும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதையில் பணம் கேட்டு மிரட்டியதில் ஒருவருக்கொருவர் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்-திரமடைந்த நண்பர்கள் நால்வரும், மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்து ஏரியில் வீசியதாக போலீசாரிடம் வாக்கு-மூலம் அளித்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட நால்வரையும், திருச்செங்-கோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்பாபு முன் ஆஜர்ப-டுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.