/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக நன்மை வேண்டி 9ம் ஆண்டாக கோ பூஜை
/
உலக நன்மை வேண்டி 9ம் ஆண்டாக கோ பூஜை
ADDED : ஜன 18, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக நன்மை வேண்டி 9ம் ஆண்டாக கோ பூஜை
நாமக்கல், :நாமக்கல் --- சேந்தமங்கலம் சாலை முத்துக்காப்பட்டியில், கொங்குதேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சார்பில், 9ம் ஆண்டாக கோ பூஜை, ஆத்மார்த்த சிவ பூஜை, நேற்று முன்தினம் இரவு நடந்தது. உலக நன்மை வேண்டி, நாட்டு பசு மாடுகளுக்கு கோமாதா பூஜை, விநாயகர் பூஜை, சிற்றம்பலவானவருக்கு அபிஷேகம், ஆத்மார்த்த சிவ பூஜை நடந்தது. சுகவனம் சிவாச்சாரியார், பூஜையை நடத்தி வைத்தார். கொடு
முடியை சேர்ந்த வசந்தகுமார் தேசிகர், பக்தி பதிகங்களை பாடினார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோ பூஜை செய்தனர்.