ADDED : ஆக 19, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, உரம்பு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன்; இவரது மகன்கள் முத்துசாமி, 50, அய்யனார், 47, சங்கர், 40. இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
இது தொடர்பாக, நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், முத்துசாமி ஆகிய இருவரும், அருகில் இருந்த கட்-டையால் அய்யனாரை தாக்கினர்.இதில், தலையில் காயமடைந்த அய்யனார், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து புகார்படி, முத்துசாமி, சங்கர் ஆகிய இருவரையும், ஆயில்பட்டி போலீசார் கைது செய்தனர்.

