/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி மிரட்டிய காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
/
நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி மிரட்டிய காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி மிரட்டிய காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி மிரட்டிய காளைகள்; தெறித்து ஓடிய வீரர்கள்
ADDED : மார் 02, 2025 07:02 AM
நாமக்கல்: நாமக்கல் அருகே, சாலப் பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், எதிர்த்து நின்று மிரட்டிய காளைகளை, அடக்க முடி-யாமல் வீரர்கள் தெறித்து ஓடினர். காளைகள் முட்டியதில், 35 பேர் காயமடைந்தனர்
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, சாலப்பாளையத்தில், 'கட்-டப்பா' என்ற காளை மாட்டின், 2ம் ஆண்டு நினைவு தினத்தை-யொட்டி, ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில் ஜல்லிக்கட்டு திரு-விழா நேற்று நடந்தது. நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்திபன் தலைமை வகித்தார். ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி, போட்டியை துவக்கி வைத்தார்.
இதில், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 750 காளைகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை, 400 மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சில முரட்டு காளைகள், 'என்னை தொட்டுப்பார்' என, மாடுபிடி வீரர்களுக்கு சவால் விட்டு, எதிர்த்து நின்று மிரட்டியதுடன், விரட்டியது. வீரர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்து, தங்களை தற்காத்துக்-கொண்டனர்.காளைகளை அடக்கியவர் களுக்கு, ரொக்கப்பரிசு, சில்வர் பாத்திரம், டேபிள், பட்டுப்புடவை, டிரஸ்சிங் டேபிள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாடு-பிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்-டது. காளை முட்டியதில், 30 வீரர்கள் காயமடைந்தனர். அ.தி.மு.க., மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் ராஜா செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்-றனர். ஏற்பாடுகளை, ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் சாலப்-பாளையம் ராஜா, நிர்வாகிகள் செய்திருந்தனர். நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமையில், 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.