/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோன் வாங்கி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
/
லோன் வாங்கி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
லோன் வாங்கி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
லோன் வாங்கி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
ADDED : ஆக 24, 2024 07:15 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட், ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று மதியம் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டனர்.
அவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர், லோன் வாங்கி தருவதாக ஆதார் அட்டை நகலில் கையெழுத்து வாங்கிச் சென்றார். ஆனால் எங்களுக்கு லோன் வாங்கி தராமல், அவரே எங்கள் பெயரை பயன்படுத்தி லோன் வாங்கிக் கொண்டார். நாங்கள் கேட்டதற்கு, 'நானேன் லோன் கட்டிக்கொள்கிறேன்' என, தெரி-வித்தார். ஆனால், அவர் லோன் கட்டாததால், எங்களை கட்ட சொல்கின்றனர். எங்களை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறுகையில், 'இது-வரை எங்களுக்கு புகார் வரவில்லை' என்றனர்.