ADDED : ஆக 20, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் யூனியன், குப்பாண்டபாளையம் பஞ்.,க்குட்பட்ட குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் சிந்தனை பேரவை சார்பில், 'சகோதரத்துவம் பேணுவோம்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது. தலைமையாசிரியர் ராஜா தலைமை வகித்தார்.
தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ரமேஷ்குமார் பேசினார். முன்னதாக, பள்ளி வளாகத்தில், அரசு, வேம்பு, புங்கன், நாவல் வகைகள் என, மொத்தம், 30 மரக்கன்றுகள் நடப்பட்டன. பேரவை பொறியாளர் நாகராஜன், சமூக ஆர்வலர் பராசக்தி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சோமசுந்தரம், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

