/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கிய சாக்கடை
/
வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கிய சாக்கடை
ADDED : ஆக 20, 2024 03:05 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பெரும்பாலான இடங்களில் போதுமான வடிகால் வசதி இல்லை. சிறிய மழை பெய்தாலும், சாலை முழுதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தால், சாக்கடை நீரும் கலந்து வெள்ளம்போல் பாய்ந்து ஓடுகிறது. எங்கும் வடிகால் வசதி இல்லாததால், சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை நின்று, ஒரு மணி நேரத்திற்கு பின் தான் தண்ணீர் வடிகிறது.
எனவே, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் ரோடு, பட்டணம் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், காட்டூர் ரோடு பகுதிகளில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. எனவே, இப்பகுதியில் சாக்கடை வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.