sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொள்முதலின் போது விலையை குறைத்து கறிக்கோழி பிடிப்பு ஒரு வாரத்தில் பண்ணையாளருக்கு ரூ.50 கோடி இழப்பு

/

கொள்முதலின் போது விலையை குறைத்து கறிக்கோழி பிடிப்பு ஒரு வாரத்தில் பண்ணையாளருக்கு ரூ.50 கோடி இழப்பு

கொள்முதலின் போது விலையை குறைத்து கறிக்கோழி பிடிப்பு ஒரு வாரத்தில் பண்ணையாளருக்கு ரூ.50 கோடி இழப்பு

கொள்முதலின் போது விலையை குறைத்து கறிக்கோழி பிடிப்பு ஒரு வாரத்தில் பண்ணையாளருக்கு ரூ.50 கோடி இழப்பு


ADDED : பிப் 25, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கொள்முதல் விலையில் இருந்து, 30 ரூபாய் குறைத்து கறிக்கோ-ழிகளை பிடிப்பதால், ஒரு வாரத்தில் பண்ணையாளர்களுக்கு, 50 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 35 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகி-றது. அவற்றை, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்-ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகி-றது.

பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்-கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்-ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்-களில், அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை.கடந்த, 1ல் கொள்முதல் விலை, கிலோ, 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து, 5ல், 90, 10ல், 93, 15ல், 99, 18ல், 85, 19ல், 89, 20ல், 94, 21ல், 96 என, ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று, 12 ரூபாய் சரிந்து, 84 ரூபாய் என, கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில், 12 ரூபாய் சரிந்துள்ளது, பண்ணையாளர்களை கவலைய-டைய செய்துள்ளது.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில், வாரம், 2.50 கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கோழி, 2.750 கிலோ உற்பத்தியான நிலையில், தற்போது, வெயில் காரணமாக, எடை குறைந்துள்ளது. அதன்படி, 2.100, 2.200 கிலோவாக சரிந்துள்ளது. மேலும், ஆந்தி-ராவில், ஒரு கிலோ கறிக்கோழி, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்-படுகிறது. தமிழகத்தில், கறிக்கோழி விலை குறைக்கவில்லை என்றால், ஆந்திரா கோழிகள் விற்பனைக்கு வந்துவிடும். அதனால், பண்ணைகளில் கறிக்கோழி தேக்கமடைந்துவிடும்.எடை குறைவு காரணமாக, கொள்முதல் விலையில், கிலோ-வுக்கு, 30 ரூபாய் வரை குறைத்து கோழிகளை பிடிக்கின்றனர். இதனால், பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. அவற்றை கருத்தில் கொண்டு, கொள்முதல் விலையை குறைக்கும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு காரணமாக, தினமும், எட்டு கோடி ரூபாய் வீதம், ஒரு வாரத்தில் மட்டும், 50 கோடி ரூபாய் வரை, பண்ணை-யாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முட்டை விலை தொடர் உயர்வுநாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 485 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 500, ஐதரா பாத், 425, விஜயவாடா, 450, பர்வாலா, 442, மும்பை, 490, மைசூரு, 485, பெங்களூரு, 485, கோல்கட்டா, 510, டில்லி, 460 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்-புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 77 ரூபாய்க்கு விற்ற முட்டைக்-கோழி விலை, எட்டு ரூபாய் குறைத்து, ஒரு கிலோ, 65 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்-பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 96 ரூபாய்க்கு விற்ற கறிக்கோழி விலை, 12 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ, 84 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us