/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க மனு
/
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க மனு
ADDED : ஆக 13, 2024 06:17 AM
நாமக்கல்: 'அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இளநகர் கிரா-மத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்துள்-ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்செங்கோடு தாலுகா, இளநகர் கிராமத்தில், அரசுக்கு சொந்த-மான நீர்நிலையான, ஏரி, குளம், குட்டை, ஊருணி, கண்மாய் மற்றும் அவற்றுக்கான நீர்வழிப்பாதைகளில், தண்ணீர் வெளி-யேறும் பாதைகள் ஆக்கிரமிப்பாளர்களால் முழுவதமாக ஆக்கிர-மிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதனால், நீர்நிலைகளை பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுதத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு-களால், நிலத்தடி நீரும் குறைந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்-ளது. மழைக்காலங்களில் நீர் சேமிக்க முடியாமல் வீணாகி வறண்டு, பாலைவனமாக மாறி வருகிறது. தமிழக அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, 1950க்கு முன் உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

