sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500: முன்னாள் அமைச்சர் உறுதி

/

அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500: முன்னாள் அமைச்சர் உறுதி

அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500: முன்னாள் அமைச்சர் உறுதி

அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,500: முன்னாள் அமைச்சர் உறுதி


ADDED : ஆக 25, 2024 06:58 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் நகர அ.தி.மு.க., சார்பில், புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:

கட்சியில் சரியாக பணியாற்றவில்லை என்றால், கண்டிக்கிற உரிமை எங்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல சரியாக பணியாற்ற-வில்லை என்றால் பொறுப்பையே மாற்றி அமைப்பேன். செயல்ப-டாதவர்களை வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பது மிக கடினம். நாடாளுமன்ற தேர்தலின் போது, மாதத்திற்கு, 25 நாட்கள் வந்தேன். 5 வார்டுக்கு ஒரு பொறுப்பாளர் என்று பணி-யாற்றியும் கூட மற்ற இடங்களில் பெற்ற ஓட்டுக்கூட ராசிபுரம் நகரத்தில் வரவில்லை.

தி.மு.க., ஆட்சியில், 2 மடங்கு மின் கட்டணம் உயர்ந்துவிட்-டது. மூன்று மாதமாக எண்ணெய், பருப்பு கொடுக்கவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனை எல்லாம் நிறுத்திவிட்டனர். அது எல்லாம் நாம் ஆட்சிக்கு வந்த-வுடன் செயல்படுத்தப்படும். தி.மு.க., அரசு தகுதியான பெண்க-ளுக்குத்தான் மாதம், 1,000 ரூபாய் கொடுத்தனர். நம் ஆட்சி வரும்போது அரிசி அட்டை வைத்துள்ள, 2 கோடியே, 15 லட்சம் பேருக்கு மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us