/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவர் விடுதியில் 'ரெய்டு' ரூ.1.69 லட்சம் பறிமுதல்
/
மாணவர் விடுதியில் 'ரெய்டு' ரூ.1.69 லட்சம் பறிமுதல்
மாணவர் விடுதியில் 'ரெய்டு' ரூ.1.69 லட்சம் பறிமுதல்
மாணவர் விடுதியில் 'ரெய்டு' ரூ.1.69 லட்சம் பறிமுதல்
ADDED : ஆக 13, 2024 06:23 AM
நாமக்கல்: பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில், சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணக்கில் வராத, 1.69 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், 29 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு-பான்மையினர் மாணவர் விடுதி உள்ளன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில், 10 விடுதியை சேர்ந்த வார்டன்கள் ஒன்று கூடி, நேற்று கூட்டம் நடத்தி உள்ளனர். அங்கு, கணக்கில் வராத பணம் வைத்திருப்ப-தாக, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.
இதையடுத்து, டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான போலீசார், நேற்று மாலை, 4:30 மணிக்கு, விடுதியில் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத, 1.69 லட்சம் ரூபாயை பறி-முதல் செய்தனர். இந்த சோதனை, இரவு, 9:30 மணி வரை நடந்-தது. பணம் யாருக்கு, எதற்காக வசூல் செய்யப்பட்டது என, விசாரணை நடத்தி
வருகின்றனர்.

