/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு
/
அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 31, 2024 12:46 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், குப்-பைக்கு தீ மூட்டுவதால், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெளி-யேறும் புகையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோயாளிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, அரசு ஆரம்ப சுகா-தார நிலையம் அருகில் வசிப்பவர்கள் குப்பை கொட்டியுள்ளனர். இதை அகற்றாமல் தீ மூட்டி விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்-பட்டு, குப்பையிலுள்ள பிளாஸ்டிக்
நெகிழி பொருட்கள் எரிந்து துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். குப்பைக்கு தீ வைக்காமல் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து சேகரித்து வைத்தால், பஞ்.,
நிர்வாகத்திற்கு பணம் வருவ-துடன், சுகாதாரம் பேணி காக்கப்படும்.