/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டை முற்றுகை: 1,000 பேர் பங்கேற்க டிட்டோஜாக் முடிவு
/
கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டை முற்றுகை: 1,000 பேர் பங்கேற்க டிட்டோஜாக் முடிவு
கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டை முற்றுகை: 1,000 பேர் பங்கேற்க டிட்டோஜாக் முடிவு
கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோட்டை முற்றுகை: 1,000 பேர் பங்கேற்க டிட்டோஜாக் முடிவு
ADDED : செப் 02, 2024 03:13 AM
நாமக்கல்: 'கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில், மாவட்டத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்பது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட டிட்டோஜாக் வேலைநிறுத்த போராட்ட ஆயத்தக் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்ட-ணியின் மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற
மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக
செல்வராசன், ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணை பொதுச்-செயலாளர் அருள்மணி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்-கினர்.
கூட்டத்தில், புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், இடை-நிலை சாதாரண நிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட, 31 அம்ச கோரிக்கைகளை
நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 10ல் நடக்கும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.இன்று மாலை, 5:00 மணிக்கு, மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றி-யங்களிலும், வட்டார ஆயத்த கூட்டம் நடத்த வேண்டும். நாளை முதல் வரும், 9 வரை, வட்டார அளவில், பள்ளிகள் தோறும் ஆசி-ரியர் சந்திப்பு இயக்கம் நடத்த
வேண்டும்.வரும், 29, 30, அக்., 1 ஆகிய, மூன்று நாட்கள் சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில், மாவட்டத்தில் இருந்து, 1,000 பேர் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.