/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
/
சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
ADDED : செப் 11, 2024 06:44 AM
ராசிபுரம்: ராசிபுரம், வி.நகரை சேர்ந்தவர் வீரய்யன் மகன் பழனிசாமி, 50. இவர், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வேலை முடிந்து, ஆண்டகலுார்கேட்டில் இருந்து ராசிபுரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் டூவீலரில் வேகமாக வந்த ராசிபுரத்தை சேர்ந்த பெரியசாமி, சைக்கிள் மீது மோதினார். இதில் துாக்கி வீசப்பட்ட பழனிசாமி, தலையில் பலத்த காயம-டைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்-சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பழனிசாமி, நேற்று உயிரிழந்தார். ராசிபுரம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.