sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உரிமம் இன்றி இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

/

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உரிமம் இன்றி இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உரிமம் இன்றி இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உரிமம் இன்றி இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை


ADDED : மார் 04, 2025 06:13 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தொழிற்சாலை, தொழில் வர்த்-தகம் செய்வோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும்' என, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்படி, நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வர்த்-தகம், வியாபாரம், தொழிற்சாலை, தொழிலகம் ஆகியவற்றிற்காக விண்ணப்பம் செய்து, உரிய உரிம கட்டணம் செலுத்தி உரிமை பெற்று வர்த்தகம் அல்லது வியாபாரம் செய்ய வேண்டும். தொழில் வர்த்தக உரிமத்துக்கான அட்டவணை, 1, 2, 3, 4 மற்றும் 5ல் குறிப்பிட்டுள்ள பொது அல்லது தனியார் என, எந்த-வொரு தொழிற்சாலை, வர்த்தகமும் அல்லது வியாபாரத்தையும், ஆணையரால் வழங்கப்படும் உரிமம் இன்றி, மாநகராட்சி எல்-லைக்குள் யாவரும் மேற்கொள்ளக்கூடாது.உரிமத்திற்கு உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்பவர்க-ளுக்கு ஆணையர் அல்லது அதிகாரம் வழங்கப்பட்டவரால் உரிமம் வழங்கப்படும். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வின் போது உரிமம் இல்லாமல் தொழில், வியாபாரம், தொழிற்சாலை இயங்கி வந்தால், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதி-கள்படி கடை, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், 'சீல்' வைக்கப்படும். எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை http://thurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது மாநகராட்சி அலுவ-லகம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, மாநக-ராட்சி அலுவலக சுகாதார பிரிவில் அலுவலக நேரத்தில் நேரில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us