ADDED : ஆக 21, 2024 01:35 AM
அ நிறம் | அளவு
ஆண் சடலம் மீட்பு
பள்ளிப்பாளையம், ஆக. 21-
பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த பட்லுார் பகுதி காவிரி ஆற்றில், ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் ஆற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த ஆண் சடலத்தை மீட்டனர். இறந்தவருக்கு, 50 வயதிருக்கும். ஊர், பெயர் போன்ற விபரங்கள் தெரியவில்லை. இறந்து ஒரு வாரம் இருக்கும் என்பதால், உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. மொளசி போலீசார், விசாரித்து வருகின்றனர். கடந்த, 17ல், இதேபோல் மொளசி காட்டுவலவு பகுதி காவிரி ஆற்றில், ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
