/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலாவதி வேளாண் உரம்திறந்தவெளியில் வீச்சு
/
காலாவதி வேளாண் உரம்திறந்தவெளியில் வீச்சு
ADDED : ஜன 18, 2025 01:18 AM
காலாவதி வேளாண் உரம்திறந்தவெளியில் வீச்சு
வெண்ணந்துார்,:வெண்ணந்துார் யூனியன், ஓ.சவுதாபுரம் பகுதியில் இருந்து அக்கரைப்பட்டி செல்லும் வழியில் திருமணிமுத்தாறு கால்வாய் செல்கிறது. இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயை ஒட்டியுள்ள கோவில் அருகே, நிலக்கடலை செடிக்கு தெளிக்கும் காலாவதியான மருந்துகள், உரங்களை திறந்தவெளி யில் வீசிச்சென்றுள்ளனர். வேளாண் துறையினர் இலவசமாக கொடுக்கும் உரங்களை, உரிய முறையில் பயன்படுத்தாமல் அதனை வீணடிக்கும் வகையில் திறந்த வெளியில் விவசாயிகள் வீசிச்சென்றுள்ளனர்.
அப்பகுதியில் மேய்க்கப்படும் ஆடு, மாடுகள் காலாவதியான உரங்களை தின்று உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்று, திறந்த வெளியில் உரங்களை வீசும் விவசாயிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.