ADDED : ஜன 18, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு : பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செங்கோடு, கோழிக்கால்நத்தம் சாலையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில், மயில் ரங்கோலி கோலம் வரைந்த திருச்சியை சேர்ந்த பிரியா முதல் பரிசு பெற்றார்.
தொண்டிக்கரடு ரம்யா, 2வது பரிசு, கைலாசம்பாளையத்தை சேர்ந்த கீதா, கூட்டப்பள்ளியை சேர்ந்த பூங்கொடி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.