ADDED : ஜன 25, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைமறைவுகுற்றவாளி சிக்கினார்
பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் அருகே, பாதரையை சேர்ந்தவர் ஆனந்தன், 24; இவர் மீது வெப்படை, ஈரோடு போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த, 6 மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். நேற்று மாலை, பாதரை பகுதியில் ஆனந்தன் பதுங்கி இருப்பதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பாதரைக்கு சென்று ஆனந்தனை கைது செய்தனர்.

