ADDED : ஜன 25, 2025 01:17 AM
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமை வகித்தார். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு குறைகள், புகார்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஆர்.டி.ஓ., சுகந்தி பேசியதாவது: பல சாய ஆலைகள், விதிமீறி செயல்படுகின்றன.களியனுார் பகுதியில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மண் அள்ளப்பட்டுள்ளது, மரம் வெட்டப்பட்டுள்ளது உள்ளிட்ட பல புகார்கள் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தெரிவித்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.வேளாண்மை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

