ADDED : பிப் 09, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாள் கோவில்களில் வழிபாடு
குமாரபாளையம் தை கடைசி சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.