ADDED : பிப் 13, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளச்சாராய விழிப்புணர்வு
பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமை, டூவீலரில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்பு, சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சேலத்தை சேர்ந்த ரேவதி, வெள்ளியங்கிரி ஆகியோர் கொண்ட கலைக்குழுவினர் ஆடல், பாடல் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.