ADDED : பிப் 15, 2025 01:53 AM
அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்
திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.,வின், அம்மா பேரவை சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே, 10 ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தெருமுனை பிரசாரம் நடந்தது.
செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''தி.மு.க.,வினர் ஆட்சியில் இருக்கிறோம் என்பதால், மக்களுக்கு விரோதமாக கூட்டப்பள்ளி காலனி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். 12 கிலோ மீட்டர் துாரத்தில் காவிரி ஆறு உள்ளது.
கழிவுநீர் செல்லும் வழித்தடத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இருக்காது,'' என்றார். தொடர்ந்து, நான்கு ரத வீதிகளில் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கினர்.

