/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலீஸ் பாதுகாப்பால்மலைக்கோட்டை 'வெறிச்'
/
போலீஸ் பாதுகாப்பால்மலைக்கோட்டை 'வெறிச்'
ADDED : பிப் 15, 2025 01:56 AM
போலீஸ் பாதுகாப்பால்மலைக்கோட்டை 'வெறிச்'
நாமக்கல்:நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இங்கு, தினமும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்து செல்வர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த காதலர்களும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதனால், மலைக்கோட்டையில் எங்கு பார்த்தாலும் காதல் ஜோடிகளாக தென்படுவர்.
இந்நிலையில், காதலர் தினமான நேற்று, மலைக்கோட்டையின் மேல் உள்ள, 'கேட்' பூட்டப்பட்டது. மேலும், மலைக்கோட்டை நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு வந்த காதலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் காதல் ஜோடிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதையொட்டி, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நேரு பூங்கா, அம்மா பூங்கா, மாநகராட்சி செல்லம் கவுண்டர் பூங்கா ஆகிய இடங்களில், அதிகளவில் காதல் ஜோடிகள் காணப்பட்டனர்.