ADDED : பிப் 23, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனி முருகனுக்கு சீர்வரிசை
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியன், நாரைக்கிணறு கிராமத்தில் குறவர் பழங்குடியினர் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்கள் வில் அம்பு என்ற பெயரில் சங்கம் வைத்துள்ளனர். இவர்கள் ஆண்டு
தோறும், மாசி மாதம் வள்ளி, முருகன் பெருவிழாவிற்கு சீர்வரிசை அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி, நேற்று மா, பலா, வாழை, தேன், தினை மாவு, கிழங்கு, இளநீர் போன்ற பல்வேறு வகையான சீர்வரிசை தட்டுகளை எடுத்துக்கொண்டு, காளை மாடுடன் ஊர்வலமாக சென்றனர். பின், அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வழிபாடு செய்து, சீர்வரிசை தட்டுகளை வைத்து, வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர். தொடர்ந்து, முருகன், வள்ளி வேடமிட்டு சிறுவர்கள் சிலம்பம் சுற்றி முக்கிய வீதி வழியாக, 2 கி.மீ., சுற்றி வந்து
பழனிக்கு பஸ்சில் புறப்பட்டனர்.

