ADDED : மார் 01, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோளில் அமர்ந்த கிளி...
சிவராத்திரி அன்று பள்ளிப்பட்டி பச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பச்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று, பச்சியம்மனின் தோளில் அமர்ந்தது. அந்த கிளி எங்கும் செல்லாமல், கடந்த, இரண்டு நாட்களாக அம்மனின் தோளில் அமர்ந்தபடி உள்ளது. இதை பக்தர்கள் பரவசத்துடன் வணங்கி சென்றனர். பச்சியம்மன் கையில் கிளியுடன் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.