/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில்அறிவியல் கண்காட்சி
/
அரசு கல்லுாரியில்அறிவியல் கண்காட்சி
ADDED : மார் 01, 2025 01:39 AM
அரசு கல்லுாரியில்அறிவியல் கண்காட்சி
குமாரபாளையம்:தேசிய அறிவியல் தினத்தையொட்டி, குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இயற்பியல் துறை சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். எக்ஸல் பொறியியல் கல்லுாரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கருப்புசாமி, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில், இயற்பியல் துறை மாணவ, மாணவியர், சோலார் பயன்பாடு, ஏ.ஐ., ரோபோட், தானியங்கி தெருவிளக்கு, தானியங்கி தீயணைப்பான், டச் சென்சார், தானியங்கி தண்ணீர் வினியோகிப்பான், காந்த ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்தல் உள்பட, 50க்கும் மேற்பட்ட படைப்புகள் உருவாக்கி பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினர்.