ADDED : மார் 06, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்கன்வாடிமையம் திறப்பு
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையங்களை சீரமைக்க, கல்வி நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, திருச்செங்கோடு நகராட்சி, எட்டிமடைபுதுாரில் நகராட்சி கல்வி நிதி, 2 லட்சத்து, 40,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யா, கவுன்சிலர்கள் ரமேஷ், சிநேகா ஹரிகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.