/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கன்னிமார் சுவாமிகள்தீர்த்தக்குட ஊர்வலம்
/
கன்னிமார் சுவாமிகள்தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : மார் 08, 2025 01:26 AM
கன்னிமார் சுவாமிகள்தீர்த்தக்குட ஊர்வலம்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் காவிரி கரையோரத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தின், ஓம் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு, கடந்த, 25ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மேலும், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
முக்கிய நிகழ்வாக, கன்னிமார் சுவாமிகள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. ஏழு குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, நகரின் முக்கிய வீதி வழியாக மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இன்று, மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவடைகிறது.