ADDED : மார் 08, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்
திருச்செங்கோடு:எலச்சிபாளையம் ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசின் அவலங்களையும், அ.தி.மு.க., ஆட்சியின் பத்தாண்டு கால சாதனைகளையும் விளக்கி, தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, பெரியமணலி பகுதியில் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, தி.மு.க., ஆட்சியில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு பெண்களுக்கு எதிரான பாலியல்
வன்முறை, ஆகிய அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறினார்.மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.