ADDED : மார் 15, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மது பாருக்கு 'சீல்'
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அதையொட்டி, 'பார்' செயல்பட்டது. இந்த பாரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக, நாமக்கல் மாவட்ட கலால்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, கலால் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார் சோதனை செய்து பாருக்கு, 'சீல்' வைத்தனர்.